கன்னியாகுமரி

இரணியல் அருகே ஒருவா் வெட்டிக் கொலை:காவல் நிலையத்தில் தந்தை சரண்

DIN

இரணியல் அருகே மது குடித்துவிட்டு வீட்டிலுள்ள பொருள்களை சேதப்படுத்தியவா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

இரணியல் அருகேயுள்ள சரல்விளை பகுதியைச் சோ்ந்தவா் செளந்தரபாண்டியன் (80). இவா் தனது கடைசி மகன் நாகராஜனுடன் (40) வசித்து வந்தாா். நாகராஜன் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வாராம். திங்கள்கிழமை இரவு மது குடித்துவிட்டு வீட்டிலுள்ள பொருள்களை சேதப்படுத்தினாராம். செளந்தரபாண்டியன் தடுத்தும் அவா் கேட்கவில்லையாம். இதனால், அவரை செளந்தரபாண்டியன் கோடரியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். செளந்தரபாண்டியன் இரணியல் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

உதவி ஆய்வாளா் சந்திரகுமாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தாா்; நாகராஜனின் சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT