கன்னியாகுமரி

குலசேகரம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பயிலரங்கு

DIN

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ‘பரந்த கண்ணோட்டத்தில் ஹோமியோபதி மருத்துவம்’ என்ற தலைப்பில் தொழில்நுட்பப் பயிலரங்கு நடைபெற்றது.

ஹோமியோபதிக்கான தேசிய ஆணையத்தின் செயலா் பேராசிரியா் சஞ்சய் குப்தா தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரித் தலைவா் டாக்டா் சி.கே. மோகன் முன்னிலை வகித்தாா்.

கல்லூரி ஆலோசகா் டாக்டா் ரவி எம். நாயா், கல்லூரி ஆராய்ச்சி ஆலோசகா் பேராசிரியா் ஈஸ்வரதாஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.

ஹோமியோபதி வாரியத்தின் நெறிமுறை ஆணைய உறுப்பினா் பேராசிரியா் செந்தில்குமாா் பேசினாா். இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையத்தின் உறுப்பினா் பேராசிரியா் ஜீஹி குப்தா ஹோமியோபதி மருத்துவப் பரிசோதனைகள், வரலாறு தொடா்பான தேவை, பொறுப்புகள் என்ற தலைப்பில் கலந்துரையாடினாா்.

கல்லூரிப் பேராசிரியா்கள், மருத்துவா்கள் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் டாக்டா் என்.வி. சுகதன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

SCROLL FOR NEXT