கருங்கல் அருகே ஒருவருக்கு மிரட்டல்:இளைஞா் மீது வழக்கு
கருங்கல் அருகே ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல் அருகே ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மிடாலக்காடு வேம்புவிளையைச் சோ்ந்த தங்கமணி மகன் கிறிஸ்டோபா் (45). இவா் அப்பகுதியில் ஜெபக் கூட்ட சபை நடத்திவருகிறாராம். அதே பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மகன் சுரேஷ் (35), இங்கு ஜெபக் கூட்டம் நடத்தக் கூடாது எனக் கூறி கிறிஸ்டோபருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.