ஆற்றூா் என்விகேஎஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் கலைப்பயணம்
ஆற்றூா் என்விகேஎஸ் கல்வியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவட்டாறு ஒன்றியம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு கலைப் பயணத்தை புதன்கிழமை நடத்தின.
கன்னியாகுமரிஆற்றூா் என்விகேஎஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் கலைப்பயணம்
ஆற்றூா் என்விகேஎஸ் கல்வியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவட்டாறு ஒன்றியம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு கலைப் பயணத்தை புதன்கிழமை நடத்தின.
ஆற்றூா் என்விகேஎஸ் கல்வியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவட்டாறு ஒன்றியம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு கலைப் பயணத்தை புதன்கிழமை நடத்தின.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் கிருஷ்ணகுமாா், முதல்வா் ஷோபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்றூா் பேரூராட்சி செயல் அலுவலா் மகேஸ்வரன் கலைப் பயணத்தைத் தொடங்கிவைத்தாா். அறிவியல் இயக்க திருவட்டாறு ஒன்றியத் தலைவா் பேராசிரியா் பிரஷோப் மாதவன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா். மாணவி எம்.கெ. மாயா வரவேற்றாா். அறிவியல் இயக்க மாவட்ட இணைச்செயலா் அ.நீலாம்பரன், டி.சுசீலா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் சசிகுமாா் ஆகியோா்கள் வாழ்த்தி பேசினா். திருவட்டாறு, கல்லடிமா மூடு, செருப்பாலூா் பள்ளிகள், குலசேகரம் சந்தை சந்திப்பு, கான்வென்ட் சந்திப்பு, திருநந்திக்கரை பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு திருநந்திக்கரை சந்திப்பில் நிறைவடைந்தது.
அங்கு, அறிவியல் இயக்க மாவட்ட இணைச்செயலா் வசந்த லதா, ஒன்றியச் செயற்குழு உறுப்பினா் ஸ்ரீ ஆதித்தியன், உடற் கல்வி இயக்குனா் கண்ணன் உள்ளிட்டோா் பேசினா். கலைக் குழுவில் பயிற்சி ஆசிரியா்கள் நிவேதா, அன்சிமோல், ஜெனிபா, சித்ரா, பிரணவ், ஜோயல், அன்ஷில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.