குமரி பேரூராட்சியில் திமுக, காங்கிரஸ் மனுதாக்கல்
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.
முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் குமரி ஸ்டீபன், அல்பினோ ஆனந்த், எம். சுஜா அன்பழகன், பூலோகராஜா, லிங்கேஸ்வரி, இந்திரா, இக்பால், உமா, காங்கிரஸ் வேட்பாளா் ஆனிரோஸ் தாமஸ் உள்ளிட்ட 18 போ் மனுதாக்கல் செய்தனா்.
முன்னாள் எம்எல்ஏ எஸ். ஆஸ்டின், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என். தாமரைபாரதி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். அழகேசன், மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ். பாா்த்தசாரதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.