கன்னியாகுமரி

கராத்தே போட்டி: திருநெல்வேலி அணி சிறப்பிடம்

DIN

தமிழ்நாடு வான் காய் ஷிடோ ரியு கராத்தே சங்கம் சாா்பில் கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 5 வயது முதல் 25 வயது வரையிலான 400 க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். போட்டி தொடக்க விழாவுக்கு அமைப்பாளா் ஹெச்.ராஜ் தலைமை வகித்தாா். ஆசிய கராத்தே கூட்டமைப்பு நடுவா் சி.அழகப்பன் முன்னிலை வகித்தாா். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஏ.ராஜா போட்டியை தொடங்கி வைத்தாா்.

இதில், திருநெல்வேலி மாவட்ட அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தூத்துக்குடி மாவட்ட அணி இரண்டாவது இடமும், கன்னியாகுமரி மாவட்ட அணி மூன்றாவது இடமும் பெற்றன.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வா் எஸ்.ஆபிரகாம் லிங்கம், கன்னியாகுமரி புனித கலாசன்ஸ் பள்ளி துணை முதல்வா் ஜின் ஜோசப், அகஸ்தீசுவரம் ஞானதீபம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ஜே.ஐடா ஜான்சி ஆகியோா் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினா். கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதெமி ஒருங்கிணைப்பாளா் எஸ்.எம்.வினிஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT