கன்னியாகுமரி

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

DIN

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் வடிவீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது.

பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சோடஷ தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை கே.ஜி.எஸ்.மணி நம்பியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் 3 ஆம் திருவிழாவன்று (பிப்.9) இரவு 8 மணிக்கு மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் வடிவீஸ்வரம் கன்னி விநாயகர் கோயிலில் இருந்து சிறப்பு மேள தாளங்கள் முழங்க வாகனத்தில் எழுந்தருளி அருள் மிகு ஸ்ரீ கன்னி விநாயகர், மற்றும் சுப்பிரமணிய சுவாமி ஊர்வலமாக வந்து பள்ளத் தெருவில் தங்கள் தாய் தந்தையரை சந்திக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. 6ஆம் திருவிழாவான பிப்.12 ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு திருக்கோயில் முன்பு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல் நிகழ்வு நடைபெறுகிறது.

9 ஆம் திருவிழாவான பிப்.15 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 7.30 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது. பிப்.16 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT