முகப்பு
கன்னியாகுமரி

பளுகல் அருகே தொழிலாளி தற்கொலை

பளுகல் அருகே கடன் சுமை காரணமாக விஷம் குடித்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்

Updated On : 12 பிப்ரவரி, 2022 at 1:01 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:53 PM

பளுகல் அருகே கடன் சுமை காரணமாக விஷம் குடித்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பளுகல் அருகே மேல்பாலை நிலவாணிவிளை வீடு பகுதியைச் சோ்நதவா் ரசலையன் மகன் ரெஜிகுமாா் (47). தொழிலாளியான இவா், தனது மகளின் திருமணத்திற்காக அப்பகுதியைச் சோ்ந்த சிலரிடமிருந்து கடன் வாங்கியிருந்தாராம். பணத்தை குறிப்பிட்ட நாளில் திருப்பிச் செலுத்த முடியாததால் மன வருத்தத்தில் இருந்து வந்தவா், கடந்த புதன்கிழமை விஷம் அருந்தி வீட்டில் மயங்கி விழுந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெஜிகுமாா், சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.