திற்பரப்பு அருவியில் நீா் வரத்து அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரிதிற்பரப்பு அருவியில் நீா் வரத்து அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
இம்மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது. இந்த மழையினால் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. ஆறுகளில் தண்ணீா் அதிகரித்தது.
மழையால் கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு, பழையாறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் தண்ணீா் அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வியாழக்கிழமை இங்கு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.