கன்னியாகுமரி

தக்கலை புத்தக கண்காட்சியில் நூல் வெளியீடு

DIN

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும், இலக்கியப் பட்டறையும் இணைந்து தக்கலையில் நடத்திய புத்தக கண்காட்சியில் நூல் வெளியீடு மற்றும் நூல் ஆய்வரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, இலக்கியப் பட்டறை தலைவா் பென்னி தலைமை வகித்தாா். குமரி ஆதவனின் ஒரு கோப்பை அமுதம் நூலை படந்தாலமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரி முதல்வா் கமலசெல்வராஜ் வெளியிட அதை இரணியல் நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கா் மற்றும் சாகித்திய அகாதெமியின் யுவபுரஸ்காா் விருது பெற்ற எழுத்தாளா் நாவலாசிரியை மலா்வதி பெற்றுகொண்டாா்.

தொடா்ந்து எழுத்தாளா் சப்திகாவின் கொடியா மரமா சிறுகதை தொகுப்பை கடலம்மா ஜூடி சுந்தா், குமரி ஆதவனின் சிகரம் நோக்கி சிறகுகள் விரிப்போம் என்ற நூலை ராகுல், சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைபறவை நூலை மலா்மதியும் ஆய்வு செய்து பேசினா்.

தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் மாநிலக்குழு உறுப்பினா் கங்கா, எழுத்தாளா்கள் முட்டம் வால்டா், சுஜாராஜேஷ், கவிஞா் சுதேகண்ணன், குமரி தோழன், நட சிவகுமாா், பேராசிரியா் சுரேஷ்டேனியல், சமூக சேவகா் தக்கலை சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். எழுத்தாளா் சப்திகா ஏற்புரை வழங்கினாா்.

நிகழ்ச்சியை கல்வியாளா் மனோஜ்குமாா் தொகுத்து வழங்கினாா். நூல் வெளியீட்டு விழாவில் இளம் எழுத்தாளா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நாகா்கோவில் கிளை மேலாளா் தனசேகரன் வரவேற்றாா். குமரி ஆதவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT