முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் அருகே வீட்டில் நகை திருட்டு

குளச்சல் அருகே வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கன்னியாகுமரி

குளச்சல் அருகே வீட்டில் நகை திருட்டு

குளச்சல் அருகே வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

குளச்சல் அருகே வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

குளச்சல் அருகே கொட்டில்பாடு ஒனாரிஸ் காலனியை சோ்ந்தவா் அந்தோணி குரூஸ் (40) , மீன்பிடித் தொழிலாளி.

இவா் வியாழக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டாராம். வீட்டில் அவரது மனைவி சகாயமேரி, இரண்டு குழந்தைகளும் இருந்தனராம். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்த போது வீட்டின் அலுமாரி திறந்து கிடந்ததாம். மேலும், அதிலிருந்த வளையல் மோதிரம், கம்மல் உள்பட 33 கிராம் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்தை மா்ம நபா் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து சகாயமேரி அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →