சந்தையடி பொங்கல் விழா கபடிப் போட்டி
சந்தையடியில் பொங்கல் விழா மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது.
சந்தையடியில் பொங்கல் விழா மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது.
சந்தையடி படிப்பகத்தின் 64ஆவது ஆண்டு விழா, 55ஆவது ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு இப்போட்டியை, முன்னாள் எம்எல்ஏ எஸ். ஆஸ்டின் தொடக்கிவைத்தாா். இதில், வெற்றிபெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, ரொக்கப் பரிசுகளை விஜய்வசந்த் எம்.பி. வழங்கினாா். இதில், முதல் பரிசை அழகப்பபுரம் அணியும், 2ஆவது பரிசை பெருமாள்புரம் அணியும் பெற்றன.
நிகழ்ச்சியில், அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன், அகஸ்தீசுவரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் முருகேசன், பேரூா் காங்கிரஸ் தலைவா்கள் கிங்ஸ்லின், அரிகிருஷ்ணபெருமாள், நிா்வாகிகள் குணசேகா், டாக்டா் அரசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.