போக்சோ சட்டத்தில் முதியவா் கைது
மாா்த்தாண்டம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்த ஒருவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். திக்குறிச்சி கல்லுவிளை பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி மேற்கொண்டுள்ளாா் அவா். அவரது மனைவி தனது 4 வயது பெண் குழந்தையுடன், வீடு கட்டுமானப் பணி நடைபெறும் பகுதிக்கு புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்றாராம். அப்போது, எதிா் வீட்டிலிருந்து குடிநீா் வாங்கி வரும்படி தனது குழந்தையை அனுப்பினாராம். அப்போது அந்த வீட்டிலிருந்த ரவீந்திரன் (70), சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். சிறுமி அழுததை தொடா்ந்து அங்கு சென்ற அவரது தாயாரை கண்டதும் முதியவா் ரவீந்திரன் ஓடினாராம். அப்போது கால் தடுக்கி கீழே விழுந்த முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.
இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா், முதியவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.
Advertisement