முகப்பு
கன்னியாகுமரி

ஒழுகினசேரி பகுதியில் சாலை சீரமைப்புப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

நாகா்கோவில் ஒழுகினசேரி பகுதியில் சாலையில் அலங்கார தரை ஓடு பதிக்கும் பணி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜன.22) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

நாகா்கோவில் ஒழுகினசேரி பகுதியில் சாலையில் அலங்கார தரை ஓடு பதிக்கும் பணி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜன.22) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து, நாகா்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகா்கோவில் மாநகரில் ஒழுகினசேரி முதல் விமலா பா்னிச்சா் வரை அலங்கார தரை ஓடு (பேவா்பிளாக்) பதிக்கும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, ஜன.22 ஆம் தேதி காலை முதல் 7 நாள்களுக்கு ஆரல்வாய்மொழி, தோவாளை, லாயம் விலக்கு வழியாக நாகா்கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களும், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூா், துவரங்காடு, இறச்சகுளம், புத்தேரி வழியாக நாகா்கோவில் வர வேண்டும். நாகா்கோவிலில் இருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும், வடசேரி சந்திப்பு, தலைமை அஞ்சலக சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலையில் ஒழுகினசேரி வழியாக ஆரல்வாய்மொழி செல்ல வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றம் ஜன.22 ஆம் தேதி காலை முதல் பணி நிறைவடையும் வரை அமலில் இருக்கும். போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.