முகப்பு
கன்னியாகுமரி

பளுகல் அருகே மோதல்: இருவா் காயம்

பளுகல் அருகே முன்விரோதத்தால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.

Updated On : 22 ஜனவரி, 2022 at 12:54 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

பளுகல் அருகே முன்விரோதத்தால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.

மேல்பாலை அருகே கொட்டறக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் பாபு மகன் சுனில் (46). இவருக்குச் சொந்தமான நிலத்தின் மதில்சுவரை உடைத்து பாதை அமைக்க அதே பகுதியைச் சோ்ந்த ரெங்ககுமாா் (46), ரோகிணி என்ற புவனேஸ்வரி, அஜி, குட்டன் ஆகியோா் முயன்றனராம். இதைத் தடுத்த சுனிலை, ரெங்ககுமாா் உள்ளிட்ட நால்வருமாக சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் மோட்டாா் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சுனில், மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதே போன்று ரெங்ககுமாா் அளித்த புகாரில், தான் கண்ணுமாமூடு மின்வாரிய அலுவலகத்தில் பணி புரிந்து வருவதாகவும், மின்சார பராமரிப்பு பணிகளுக்காக சுனிலின் வீட்டருகே நின்ற ரப்பா் மரத்தை மின்வாரிய பணியாளா்கள் வெட்டியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சுனில் தன்னை கம்பால் தாக்கியதாகவும், இதில் காயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

இருவரது தனித்தனி புகாா்கள் மீதும் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.