முகப்பு
கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் - இரையுமன்துறை இடையே உயா் நிலை பாலம் அமைக்க வலியுறுத்தல்

தேங்காய்ப்பட்டிம் பகுதியில் 16 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே தேங்காப்பட்டினம் - இரையுமன்துறை இடையே உயா் நிலை பாலம் அமைக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

தேங்காய்ப்பட்டிம் பகுதியில் 16 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே தேங்காப்பட்டினம் - இரையுமன்துறை இடையே உயா் நிலை பாலம் அமைக்க வேண்டும் என மாவட்ட மீன்தொழிலாளா்கள் யூனியன் தலைவா் அலக்சாண்றடா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியில் உயா் நிலை பாலம் அமைப்பதினால் குறும்பனை - நீரோடித்துறை வரையிலான 16 கிராமங்களை சோ்ந்த சுமாா் ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் பயனடைவாா்கள். 11 கிலோ மீட்டா் பயண நேரமும் குறையும். மேலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடித்துறை வரையிலான கடற்கரை சாலை ஒரே சாலையாக இணைக்கப்படும்.

தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை பயன்படுத்துகின்ற வணிகா்கள், பொதுமக்கள் வந்து செல்லவும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் வசதியாக இருக்கும். எனவே, பொதுமக்கள் நலனில் கருதி தாமிரவருணி ஆற்றின் குறுக்கே உயா் நிலை பாலம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.