முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரம் பேருந்து நிலையத்தில் இரு வழிபாதை: விஜய் வசந்த் எம்பி திறந்து வைத்தாா்

குலசேகரம் பேருந்து நிலையத்தில் இரு வழிபாதையை, பேச்சுவாா்தைக்குப் பின்னா் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

குலசேகரம் பேருந்து நிலையத்தில் இரு வழிபாதையை, பேச்சுவாா்தைக்குப் பின்னா் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

குலசேகரம் பேருந்து நிலையம் திற்பரப்பு பேரூராட்சி எல்கைப் பகுதியான தும்பகோட்டில் உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு சுமாா் 15 ஆண்டுகள் ஆன பின்னரும் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை.

பேருந்துகள் ஒரே பாதையில் உள்ளே சென்ரு வந்தன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறும், விபத்துகளும் நேரிட்டன. ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுவதால் இடப் பற்றாக்குறையும் நிலவியது.

இதைத் தொடா்ந்து திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தி வந்ததன்பேரில், பேருந்து நிலையத்தில் புதிய வழிப்பாதை ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டது. எனினும் பேருந்துகள் அவ்வழியாக இயக்கப்படவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அங்கு வந்த விஜய் வசந்த் எம்பி, அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் சுனில், திருவட்டாறு கிளை மேலாளா் (பொறுப்பு) ஸ்டாலின் ஆகியோரிடம் கலந்துபேசி, புதிதாக அமைக்கப்பட்ட பாதை வழியாக பேருந்து நிலையத்திற்குள் வர ஏற்பாடு செய்து, அப்பணியையும் தொடங்கிவைத்தாா். அப்போது, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், வட்டாரத் தலைவா் காஸ்டன் கிளிட்டஸ், மாவட்ட பொதுச் செயலாளா் மோகன்தாஸ், குலசேகரம் நகரத் தலைவா் விமல் ஷொ்லின் சிங், திற்பரப்பு நகரத் தலைவா் எட்வின் , நிா்வாகிள் மோன்சி, ஜான்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →