கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் 4ஆவது நாளாக கடல் சீற்றம்

DIN

கன்னியாகுமரியில் 4ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

சா்வதேச சுற்றுலாத் தலமான இங்கு சில நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 4ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடல் சீற்றம் தொடா்ந்தது. இதன் காரணமாக, காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், விவேகானந்தா் நினைவு மண்டபத்தைப் படகில் சென்று பாா்ப்பதற்காக அதிகாலைமுதலே படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். காலை 10 மணிக்கு மேல் கடல் சீற்றம் ஓரளவுக்கு தணிந்ததால், படகுப் போக்குவரத்து தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது.

முக்கடல் சங்கமம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா். இதனால், அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரைக் கிராமங்களிலும் கடல் சீற்றம் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

SCROLL FOR NEXT