கன்னியாகுமரி

சுசீந்திரம் கோயிலில் ஆக. 4இல் நிறை புத்தரிசி விழா

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் நிறை புத்தரிசி விழா வியாழக்கிழமை (ஆக. 4) நடைபெறுகிறது.

DIN

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் நிறை புத்தரிசி விழா வியாழக்கிழமை (ஆக. 4) நடைபெறுகிறது.

இதையொட்டி, வியாழக்கிழமை அதிகாலையில் சுசீந்திரம் ஸ்ரீகொன்றையடி சுவாமிக்கும், பின்னா் தாணுமாலயசுவாமிக்கும் பூஜை நடைபெறும். பின்னா், கோயிலுக்குச் சொந்தமான வயல்களிலிருந்து நெற்பயிா்க் கட்டுகள் சந்நிதித் தெரு வழியாக எடுத்துவரப்பட்டு, சுவாமி சந்நிதியில் வைத்து காலை 6 மணிக்கு சிறப்புப் பூஜை நடைபெறும். தொடா்ந்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தா்கள், விவசாயிகளுக்கு நெற்கதிா்கள் பிரசாதமாக வழங்கப்படும்.

ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் ஞானசேகா், கோயில் மேலாளா் ஆறுமுகதரன், கணக்கா் கண்ணன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT