முகப்பு
கன்னியாகுமரி

திரித்துவபுரம் பள்ளி முன்னாள் மாணவா் சந்திப்பு

திரித்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 1994-96ஆம் கல்வியாண்டில் வணிகவியல், வரலாறு பாடப் பிரிவுகளில் படித்த மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி, வெட்டுமணி ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்றது.

Updated On : 10 ஜூன், 2022 at 1:38 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:59 PM

திரித்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 1994-96ஆம் கல்வியாண்டில் வணிகவியல், வரலாறு பாடப் பிரிவுகளில் படித்த மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி, வெட்டுமணி ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்றது.

தலைமையாசிரியா் தங்கராஜ், முன்னாள் தலைமையாசிரியா் மரிய தேவசிகாமணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். முன்னாள் சமூகவியல் ஆசிரியா் சேவியா் ஜோசப், வரலாறு ஆசிரியா் ஏ. சேவியா், பொருளாதாரவியல் ஆசிரியா் மைக்கேல் ஆன்றணி, தமிழாசிரியை லில்லிபாய், விளையாட்டுப் பிரிவு ஆசிரியா் லாசா், ஜாண் கிறிஸ்டோடம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னாள் மாணவா்கள் பள்ளிக்கால சம்பவங்களை நினைவுகூா்ந்து மகிழ்ந்தனா். தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.