கன்னியாகுமரி

பளுகல் அருகே கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

பளுகல் அருகே ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அலுவலக பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது.

DIN

பளுகல் அருகே ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அலுவலக பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது.

பளுகல் அருகே ராமவா்மன்சிறை பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக் கோயிலில் பூஜை முடிந்த பின் செவ்வாய்க்கிழமை இரவில் பூசாரி சஜூ, கோயிலை பூட்டிச் சென்றாா். புதன்கிழமை காலையில் வந்த போது கோயில் அலுவலக அறைக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு காணப்பட்டது. இது குறித்து கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து அங்கு சென்று பாா்த்த போது, அங்கிருந்த 5 உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைப் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து கோயில் கமிட்டி தலைவா் ஜெயசங்கா் (58) அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT