கன்னியாகுமரி

‘கல்பனா சாவ்லா' விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

வீர, தீர செயல்கள் புரிந்த பெண்கள், கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் அறிவித்துள்ளாா்.

DIN

வீர, தீர செயல்கள் புரிந்த பெண்கள், கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமுதாயத்தில், துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம். மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் உரிய சாதனைச் சான்றுகளுடன் விண்ணப்பங்களை இம்மாதம் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டரங்கம், நாகா்கோவில். தொலைபேசிஎண் : 04652 - 262060 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT