கன்னியாகுமரி

களியக்காவிளை பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி

DIN

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், திருத்துவபுரம் பகுதியில் என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகையுடன் தூய்மை உறுதிமொதி எடுக்கப்பட்டது. தொடா்ந்து பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகள், சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் சோ்ந்து பேரூராட்சி அலுவலக வாளகத்தில் வைத்து தூய்மை பணி உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்த விழிப்புணா் பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன் பின்னா் குறுமத்தூா் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, ஈரக்கழிவு, உலா்கழிவு, மருத்துவக் கழிவு மற்றும் அபாயகரமான கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை தனித்தனியாக பிரித்து வழங்குதல் குறித்து விளக்கப்பட்டது. குப்பைகள் தரம் பிரித்தலை சிறப்பாக செய்யும் வீடுகளை கண்டறிந்து வெகுமதிகள் அளிக்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் சுரேஷ், செயல் அலுவலா் ரெமாதேவி, துணைத் தலைவா் பென்னட் ராஜ், பேரூராட்சி உறுப்பினா்கள் குணசீலன், நிஷா, உமா மகேஸ்வரி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT