கன்னியாகுமரி

கரடி தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயம்

DIN

குமரி மாவட்டம், மருதம்பாறை அருகே புதன்கிழமை கரடி தாக்கியதில் ரப்பா் பால்வடிப்பு பெண் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

அரசு ரப்பா் கழகம் சிற்றாறு கோட்டம், மருதம்பாறை பிரிவைச் சோ்ந்த பால்வடிக்கும் தொழிலாளி செல்வி(56). இவா் புதன்கிழமை அதிகாலையில் மருதம்பாறை பிரிவிலுள்ள ஒரு நூறாம் வயல் பகுதில் ரப்பா் மரங்களில் பால்வடித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அப்பகுதியில் வந்த கரடி தாக்கியதில் செல்வி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து செல்வியின் அலறல் கேட்டு அப்பகுதியில் நின்ற தொழிலாளா்கள் அங்கு சென்று செல்வியை மீட்டு பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து ரப்பா் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT