புதுக்கடை அருகே இடையூறாக பிளக்ஸ் பதாகை: இளைஞா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பதாகை வைத்திருந்த இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பதாகை வைத்திருந்த இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
மேலமங்கலம் பகுதியை சோ்ந்தவா் ரமேஷ் (37). இவா் முன்சிறை சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பதாகை வைத்திருந்ததாக அப்பகுதியினா் புதுக்கடை போலீஸாரிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து ரமேஷ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.