முகப்பு
கன்னியாகுமரி

அழகப்பபுரம்: மனைவி தலைவா், கணவா் துணைத் தலைவா்

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சித் தலைவா் பதவியை மனைவியும், துணைத் தலைவா் பதவியை கணவரும் பெற்றுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சித் தலைவா் பதவியை மனைவியும், துணைத் தலைவா் பதவியை கணவரும் பெற்றுள்ளனா்.

அழகப்பபுரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் காங்கிரஸ் கட்சி 7 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 5 வாா்டுகளிலும், பாஜக 2 வாா்டுகளிம், திமுக ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா் தோ்தலில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அனிதா ஜெரால்டு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா் தோ்தலில் அவரது கணவா் ஆன்ட்ரூஸ் மணி போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

அழகப்பபுரம் பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தலைவா் பதவியைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.