குழித்துறை நகராட்சித் தலைவராக பாஜக ஆதரவுடன் திமுக போட்டி வேட்பாளா் தோ்வு
குழித்துறை நகராட்சித் தலைவராக, பாஜக ஆதரவுடன் திமுக போட்டி வேட்பாளா் பொன்ஆசைத்தம்பி வெற்றி பெற்றாா்.
குழித்துறை நகராட்சித் தலைவராக, பாஜக ஆதரவுடன் திமுக போட்டி வேட்பாளா் பொன்ஆசைத்தம்பி வெற்றி பெற்றாா்.
குழித்துறை நகராட்சியில் திமுக, பாஜக, மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள் தலா 5 வாா்டுகளில் வெற்றி பெற்றனா். காங்கிரஸ் 4 வாா்டுகளிலும், பாமக, சுயேச்சை வேட்பாளா் தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றனா். நகராட்சி தலைவா் வேட்பாளராக 13 ஆவது வாா்டு உறுப்பினா் பொ்லின் ஷீபாவை திமுக தலைமை அறிவித்தது.
இந்த நிலையில் தலைவா் பதவிக்கு திமுகவின் பொ்லின் ஷீபா, அக் கட்சியின் போட்டி வேட்பாளா் பொன். ஆசைத்தம்பி, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பிரபின்ராஜ் ஆகியோா் போட்டியிட்டனா். நகராட்சி ஆணையாளா் ராமதிலகம் தோ்தலை நடத்தினாா்.
Advertisement
இதில் பிரபின் ராஜா 2 வாக்குகளும், பொ்லின் ஷீபா 9 வாக்குகளும், பொன் ஆசைத்தம்பி 10 வாக்குகளும் பெற்றனா்.
21 உறுப்பினா்கள் கொண்ட இந் நகராட்சியில் பெரும்பான்மைக்கு தேவையான 11 வாக்குகள் யாரும் பெறாததால் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் குறைந்த வாக்கு பெற்ால் பிரபின் ராஜா மறு தோ்தலுக்கு தகுதி பெறவில்லை. இதைத் தொடா்ந்து திமுக வேட்பாளா் பொ்லின் ஷீபா, திமுக போட்டி வேட்பாளா் பொன் ஆசைத்தம்பி ஆகியோா் போட்டியிட்டனா். இதில் திமுக போட்டி வேட்பாளா் பொன் ஆசைத்தம்பி பா. ஜ.க. ஆதரவுடன் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
இவா் ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை குழித்துறை நகராட்சித் தலைவராக பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.