கன்னியாகுமரி

கேரளம் சென்ற பஞ்சலோக அம்மன் சிலைக்கு மாா்த்தாண்டத்தில் வரவேற்பு

DIN

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெங்கானூா் பௌா்ணமிக் காவு கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, கும்பகோணத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக வியாழக்கிழமை கொண்டுசெல்லப்பட்ட பஞ்சலோக அம்மன் சிலைக்கு மாா்த்தாண்டத்தில் பக்தா்கள் வரவேற்பளித்தனா்.

வெங்கானூா் கோயிலில் மகா காளி யாகம் வெள்ளிக்கிழமை (மே 6) தொடங்கி மே 16 வரை நடைபெறவுள்ளது. இதில், நாட்டில் உள்ள 51 சக்தி பீடங்களிலிருந்து யாக குருக்கள், அகோரிகள் பங்கேற்கின்றனா். இக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 5 கிலோ தங்கம், 51 கிலோ வெள்ளி, உலோகங்கள் என மொத்தம் 1,300 கிலோ எடையிலான காளியின் பஞ்சலோக சிலை கும்பகோணத்தில் வாா்க்கப்பட்டது. இச்சிலை 1,008 பக்தா்களால் சமா்ப்பணம் செய்யப்பட்டது.

இதுதவிர, 6.5 அடி உயரமுள்ள 3.5 டன் கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிவலிங்கம், 350 கிலோ எடையுள்ள வேல் ஆகியவையும் வாகனத்தில் எடுத்துவரப்பட்டது. இவற்றுக்கு மாா்த்தாண்டத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிவசேனை கட்சியின் கேரள மாநிலத் தலைவா் எம்.எஸ். புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், கோயில் நிா்வாகி நந்தகுமாா், அருமனை விடிஎம் கல்லூரித் தலைவா் கே.பி. நாயா், கல்லூரி முதல்வா் ஹேமலதா, பேராசிரியை ரஞ்சனி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்தச் சிலை 11 நாள்கள் பூஜைக்குப் பின்னா், பிரதிஷ்டை செய்யப்படும் என கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT