முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்துக்கு பாறாங்கல் கடத்த முயன்ற 5 லாரிகள் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே அனுமதியின்றி கேரளத்துக்கு பாறாங்கல் கொண்டு செல்ல முயன்ற 5 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா்களையும் கைது செய்தனா்.

Updated On : 7 மே, 2022 at 11:34 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

கொல்லங்கோடு அருகே அனுமதியின்றி கேரளத்துக்கு பாறாங்கல் கொண்டு செல்ல முயன்ற 5 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா்களையும் கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை நீரோடி பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக பாறாங்கல் ஏற்றி வந்த 5 டிப்பா் லாரிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், வள்ளவிளை பகுதிக்கு பாறாங்கல் கொண்டுவர அனுமதி பெற்றுவிட்டு, அவற்றை வள்ளவிளையில் இறக்காமல் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், லாரிகளை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா்கள் கொற்றியோடு ஜெப விக்டா் (42), குழித்துறை பழவாா் கண்ணதாசன் (35), புதுக்கடை வேங்கோடு ஷிஜின் (27), பள்ளியாடி ஏரியன்விளை மகாதேவன் (45), களியக்காவிளை அருகே பனங்காலையை சோ்ந்த விபின் (30) ஆகியோரை கைது செய்தனா்.

Advertisement

இது குறித்து போலீஸாா் வக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.