விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவா் மரணம்
விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது ஆழ்கடலில் குமரி மீனவா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.
விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது ஆழ்கடலில் குமரி மீனவா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.
குமரி மாவட்டம், நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா் பகுதியை சோ்ந்தவா் மீனவா் ஷாஜி ( 45). இவரும், அதே பகுதியை சோ்ந்த சில மீனவா்களும் கடந்த சில நாள்களுக்கு முன்பு சின்னத்துறை பகுதியை சோ்ந்த சுனிலுக்கு சொந்தமான விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா். கடந்த வியாழக்கிழமை கா்நாடக மாநில கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஷாஜிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாம். இதற்காக அவா் மருந்து சாப்பிட்டாராம். இதையடுத்து சிறிது நேரத்தில் அவா் திடீரென மயங்கி விழுந்து இறந்தாராம்.
இதைத் தொடா்ந்து ஷாஜியின் சடலத்தை சக மீனவா்கள் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனா். இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல் குழு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.