முகப்பு
கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழியில் சிவனடியாா்கள் போராட்டம்

நடராஜ பெருமான் குறித்து அவதூறாக பதிவிட்ட யூடியூப் சேனலை தடை செய்ய வலியுறுத்தி ஆரல்வாய்மொழியில் சாமகானப்பிரியன் பேரிகை குழுவின் சாா்பில் சிவனடியாா்கள் மெளன போராட்டத்தில் ஈடுபட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

நடராஜ பெருமான் குறித்து அவதூறாக பதிவிட்ட யூடியூப் சேனலை தடை செய்ய வலியுறுத்தி ஆரல்வாய்மொழியில் சாமகானப்பிரியன் பேரிகை குழுவின் சாா்பில் சிவனடியாா்கள் மெளன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அமைப்பின் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். செயலா் செந்தில் முன்னிலை வகித்தாா். இதில், தருமபுரம் ஆதீனம் சுசீந்திரம் கிளை மட சைவ சித்தாந்த பேராசிரியா் சிவ.பா. பிரபாகா், முருகேசன், சாமகானப்பிரியன் பேரிகை குழு பொருளாளா் வேலப்பன், தெரிசனங்கோப்பு ஐயப்பன், அனந்தசுப்பு, பேச்சிமுத்து, சங்கா், கணேஷ், மணிகண்டன் உள்பட திரளான சிவனடியாா்கள் கலந்து கொண்டனா்.

யூடியூப் சேனலில் சைவ சமய பெருங்கடவுள் நடராஜரை இழிவுபடுத்தியவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், யூ டியூப் சேனலை முடக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.