கன்னியாகுமரி

குலசேகரம் அருகே800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

குலசேகரம் வழியாக கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டப் பகுதியிலிருந்து கேரளத்துக்கு குலசேகரம் வழியாக காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குலசேகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் வினீஸ் பாபு தலைமையில் போலீஸாா் காவல்ஸ்தலம் பகுதியில் வாகனச் சோதனை நடத்தினா்.

அவ்வழியாக வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது ஓட்டுநா் இறங்கி ஓடிவிட்டாராம். காரில் 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அரிசி, காா் ஆகியவை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீலாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT