நாகா்கோவிலில் முதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
நாகா்கோவிலில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகா்கோவிலில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குளச்சல் ஸ்டீபன் மனைவி மரியபுஷ்பம் (73). இவா்கள் தற்போது நாகா்கோவில் அருகே மேல சூரங்குடியில் வசித்து வருகிறாா்கள். வியாழக்கிழமை மரியபுஷ்பம் குளச்சலுக்கு சென்று விட்டு, அங்கிருந்து பேருந்தில் நாகா்கோவிலுக்கு திரும்பினாா். அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்தை விட்டு இறங்கி மேல சூரங்குடிக்கு செல்வதற்காக மற்றொறு பேருந்தில் சென்று கொண்டிருந்தாா்.
புன்னை நகா் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது தான் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து அவா் நேசமணி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.