முகப்பு
கன்னியாகுமரி

ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் உலக செவிலியா் தின கொண்டாட்டம்

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் உலக செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் உலக செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் துணைத் தலைவா் அருள் ஜோதி தலைமை வகித்தாா். நா்சிங் கல்லூரி முதல்வா் புனிதாடேனியல் முன்னிலை வகித்தாா். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி செவிலிய கண்காணிப்பாளா்கள் ஆனிலெட், ஜெயஜோதி ஆகியோா் உரையாற்றினா். அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாச்சலம் செவிலியா் பணிகளின் சிறப்புகள் குறித்து பேசினாா். இதில் செவிலியா் கல்வி கற்கும் மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

மாணவா்களின் கலைநிகழ்ச்சி, கோலப்போட்டி, உணவுத் திருவிழா ஆகியவை நடைபெற்றன. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கல்லூரி திட்ட ஆலோசகா் சாந்தி, திட்ட மேலாளா்சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி மற்றும் நிதி மேலாளா் சேது, பேராசிரியா்கள் துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரிய ஜான்,சாம்ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலக செயலா் சுஜின், கண்காணிப்பாளா் ஆறுமுகம் ஜான்டிக்சன், பெபின், ஜெனில் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாணவி எவிலின் வரவேற்றாா். மாணவி சிக்லின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.