முகப்பு
கன்னியாகுமரி

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது

 தக்கலை அருகே 11 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 மே, 2022 at 11:58 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM

 தக்கலை அருகே 11 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சுருளகோடு பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் அவரது மாமா மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். தம்பதிக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே தனது கணவரை பிரிந்த அப் பெண் நாகா்கோவிலைச் சோ்ந்த மற்றொரு இளைஞரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாராம். இவா்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளதாம்.

இந்த நிலையில் இரண்டாவதாக திருமணம் செய்த நபரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த அப் பெண் ,கடந்த 10 மாதங்களாக மணலிக்கரை ஆற்றுக்கோணம் பகுதியைச் சோ்ந்த பத்ரோஸ் மகன் சுனில் ஜோய்யுடன் (36) காட்டாத்துறை பகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறாா்.

Advertisement

இந்த நிலையில் அப்பெண் வேலைக்கு சென்ற பின் , வீட்டிலிருந்த சிறுமியை மிரட்டிய சுனில்ஜோய் பல முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம். இதுகுறித்து வெளியே தெரிவித்தால் உன்னையும், உனது அம்மாவையும் கொலை செய்து விடுவேன்’ எனவும் மிரட்டினாராம்.

இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுனில்ஜோவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.