முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் ஜூன் 1 முதல் மீன்பிடி தடைக்காலம்

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கும் என ஆட்சியா் மா.அரவிந்த் அறிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கும் என ஆட்சியா் மா.அரவிந்த் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடலோரப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலம், மீன்வளப் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப் படகுகள் அந்த எல்லைக்குள்பட்ட கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இத்தடையை மீறி மீன்பிடித் தொழில்புரியும் மீன்பிடி விசைப்படகுகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.