முகப்பு
கன்னியாகுமரி

‘கன்னியாகுமரியை குப்பையில்லா மாவட்டமாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’

கன்னியாகுமரியை குப்பையில்லா மாவட்டமாக மாற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வலியுறுத்தினாா்.

Updated On : 4 நவம்பர், 2022 at 3:48 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:14 PM

கன்னியாகுமரியை குப்பையில்லா மாவட்டமாக மாற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வலியுறுத்தினாா்.

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட வெட்டுமணியில் மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறும் ‘தீா்வு தளம்’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்திய பிறகு அமைச்சா் பேசியது: இம்மாவட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 165 கோடி, பழுதான நெடுஞ்சாலைகளை சீரமைக்க ரூ. 15 கோடி, ஊரக- நகா்ப்புற உள்ளாட்சி சாலைகளை சீரமைக்க ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இம்மாவட்ட கோயில்களை சீரமைக்க ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலையில் தற்போது அவை படிப்படியாக அகற்றப்படுவதுடன், இம்மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. மாணவா்கள், இளைஞா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதைத் தடுக்க காவல் துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக்க மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபா ஜி. இம்மானுவேல், குழித்துறை நகராட்சி ஆணையா் க. ராமதிலகம், விளவங்கோடு வட்டாட்சியா் பாபு ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் அனில்குமாா், துறைசாா்ந்த அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.