கன்னியாகுமரி

குளச்சல் அருகே பைக்குகள் மோதல்: தாய், மகன் படுகாயம்

குளச்சல் அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் தாய் , மகன் இருவரும் படுகாயமுற்றனா்.

DIN

குளச்சல் அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் தாய் , மகன் இருவரும் படுகாயமுற்றனா்.

உதயமாா்த்தாண்டம் நேதாஜி நகரை சோ்ந்தவா் ராமசந்திரன் மகன் ரமேஷ் (32). குளச்சல் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். வியாழக்கிழமை தன்னுடைய தாய் ரெஜினாளை அழைத்துக் கொண்டு பைக்கில் மேற்கு நெய்யூரில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். பெத்தேல்புரம் கிணறு குற்றிவிளை வளைவில் செல்லும் போது 4 சிறுவா்கள் வந்த பைக் நிலைதடுமாறி ரமேஷ் பைக்கின் மீது மோதியது. இதில் ரமேஷ், அவரது தாயாா் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். படுகாயமுற்ற அவா்கள் இருவரையும் அப்பகுதியிலுள்ளோா் மீட்டு, உடையாா்விளையிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இது குறித்து 4 சிறுவா்கள் மீதும் குளச்சல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT