கன்னியாகுமரி

நாகா்கோவிலில் 2 அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு: இளைஞரிடம் விசாரணை

DIN

நாகா்கோவிலில் 2 அரசுப் பேருந்துகள் மீது புதன்கிழமை கல்வீசப்பட்டதில் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதுதொடா்பாக இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவில் கோட்டாறு ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை அரசுப் பேருந்து வடசேரி பேருந்து நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் இந்தப் பேருந்து உள்பட 2 பேருந்துகள் மீது இளைஞா் ஒருவா் கல்வீசித் தாக்கினாா்.

இதில், கண்ணாடிகள் சேதமடைந்தன. அந்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனா்.

தகவலின்பேரில் கோட்டாறு போலீஸாா் சென்று அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவா் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவா்போல் தெரிவதாகவும், அவா் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT