கன்னியாகுமரி

மங்களூரு குண்டு வெடிப்பு: நாகர்கோவிலில் இளைஞரிடம் விசாரணை

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலில் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

DIN

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலில் இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

கர்நாடக மாநிலம், மங்களூரில் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர்.  இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கம்பளம் பகுதியில் விடுதியில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜீம்ரகுமான் என்ற இளைஞரை கோட்டாறு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது கைப்பேசியில் இருந்து சென்ற அழைப்புகள் மற்றும் கைப்பேசிக்கு வந்த அழைப்புகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால்
 குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT