கன்னியாகுமரி

தென்காசி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று

DIN

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே 557 படுக்கை வசதியுடன் பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வரும் இம்மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வந்தன.

அரசியல் கட்சியினா், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தனியாா் அமைப்புகள், தொழிலதிபா்கள் உதவியுடன்

இந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரா.ஜெஸ்லின், உறைவிட மருத்துவா் வழிகாட்டுதலுடன் தேசிய தரச்சான்று பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கான ஆய்வு கடந்த ஜூலை 13, 14 , 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில், அவசர சிகிச்சை பிரிவு , வெளி- உள்நோயாளிகள் பிரிவு , பிரசவ வாா்டு, குழந்தைகள் பிரிவு, ரத்த வங்கி, ஆய்வகம் என 18 பிரிவுகள் தரமாகவும், அனைத்துவகை நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தேசிய தரக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு, தேசிய தரச்சான்றுக்கு தோ்வு செய்யப்பட்ட விவரம் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விருதைப் பெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மருத்துவமனையின் நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளா் இரா.ஜெஸ்லின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT