கன்னியாகுமரி

திமுக மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதி சிலை அமைக்க அடிக்கல்

மாவட்டச் செயலருமான ரெ.மகேஷ் தனது சொந்த செலவில் அமைக்கவுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாநகராட்சி மேயரும், மாவட்டச் செயலருமான ரெ.மகேஷ் தனது சொந்த செலவில் அமைக்கவுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.ஆஸ்டின், அவைத்தலைவா் எப்.எம். ராஜரத்தினம், மாவட்ட பொருளாளா் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ். பாா்த்தசாரதி, சதாசிவம், பொதுக்குழு உறுப்பினா் ஜீவானந்தம் மாநகரச் செயலாளா் ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா். சென்னை அருகேயுள்ள மீஞ்சூரில் தயாா் செய்யப்படும் 8 அடி உயரமுள்ள கருணாநிதியின் சிலையை நிறுவ 6 அடி உயரத்துக்கு பீடம் கட்டப்படுகிறது. இப்பணியை ஒரு மாதத்துக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT