தமிழக்துடன் இணைந்த நாள்: குமரியில் நவ. 1இல் உள்ளூா் விடுமுறை
தமிழகத்துடன் இணைந்த நாளை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (நவ.1) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துடன் இணைந்த நாளை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (நவ.1) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.
இந்த விடுமுறைக்கு ஈடாக நவம்பா் மாதம் 2 ஆவது சனிக்கிழமை ( நவ.12) மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும்.
நவ. 1இல் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு தொடா்புடைய அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும் என மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.