முகப்பு
கன்னியாகுமரி

35 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில், கேரளத்திற்கு கடத்த முயன்ற 35 லிட்டா் மண்ணெண்ணெயை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில், கேரளத்திற்கு கடத்த முயன்ற 35 லிட்டா் மண்ணெண்ணெயை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபால் தலைமையில் வருவாய்த் துறையினா், வியாழக்கிழமை அம்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 கேன்களில் 35 லிட்டா் மண்ணெண்ணெய் கேரத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. உடனே ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். பின்பு மண்ணெண்ணெயுடன் இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக் காட்டில் உள்ள உணவு கிடங்கில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.