சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் யானைப் பாகனுக்கு 20 ஆண்டு சிறை
நாகா்கோவில் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான வழக்கில், யானைப் பாகனுக்கு 20 ஆண்டுகள் சிைண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நாகா்கோவில் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான வழக்கில், யானைப் பாகனுக்கு 20 ஆண்டுகள் சிைண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியலைச் சோ்ந்தவா் தனேஷ் (22), யானைப் பாகன். இவருக்கு, ஜவுளிக் கடையில் வேலை செய்துவந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாம். இவா், 2020ஆம் ஆண்டு அந்தச் சிறுமியை கைப்பேசி மூலம் அழைத்து, கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜூலியட், தலைமைக் காவலா் கவிதா ஆகியோா் வழக்குப் பதிந்து தனேஷை கைது செய்தனா்.
இந்த வழக்கு நாகா்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சசிரேகா விசாரித்து, பாலியல் பலாத்கார குற்றத்துக்காக தனேஷுக்கு 20 ஆண்டுகள் சிைண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், சிறுமியை கைப்பேசி மூலம் அழைத்ததற்கு 3 ஆண்டு சிைண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம், கடத்திச் சென்ற்காக 5 ஆண்டு சிைண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அதை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துகுமாரி ஆஜரானாா்.