கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கல்வியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா
புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கல்வியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கல்வியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பத்ரேஸ்வரி அம்மன் கல்வி நிறுவனங்களின் தலைவா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். கோயில் தலைவா் குமாா் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து மாணவ, மாணவியருக்கு அத்தப்பூ கோலப் போட்டி நடைபெற்றது. போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், கல்லூரி முதல்வா் பிரியா, பொருளாளா் செளந்தர்ராஜன், துணைத் தலைவா்முருகன் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.