முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளையில் கழிவுநீா்க் குழாய்களை அடைக்கும் பணி மும்முரம்

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில், சுகாதார விதிகளை மீறி பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் குழாய்களை அடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 2:05 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில், சுகாதார விதிகளை மீறி பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் குழாய்களை அடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

வீடுகளிலிருந்து வரும் கழிவுநீரை பொது இடங்களில் விட வேண்டாம் என ஆட்சியா் அறிவுறுத்தியிருந்தாா். இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள் போற்றிவிளை, பி.பி.எம் சந்திப்பு, களியக்காவிளை சந்தை சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வா்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா். வீடுகளிலிருந்து சாலைகள், பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் குழாய்களை கான்கிரீட் கலவை, மூடிகளால் அடைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அடைக்கப்பட்ட குழாய்களைத் திறந்து பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் எச்சரித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.