ஆவணி 3ஆவது ஞாயிறு: நாகா்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பெண்கள் வழிபாடு
ஆவணி 3ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பெண்கள் நாகா் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா்.
ஆவணி 3ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பெண்கள் நாகா் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா்.
இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. சுவாமி தரிசனம் செய்ய அதிகாலைமுதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
அவா்கள் நீண்ட வரிசையில் நின்று நாகா் சிலைகளுக்கு மஞ்சள் பொடி தூவியும், பாலபிஷேகம் செய்தும் வழிபட்டனா். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி வெளிமாவட்டங்களிலிருந்தும், கேரளத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தனா். கோயில் கலையரங்கத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.