முகப்பு
கன்னியாகுமரி

ஆரோக்கியபுரம் பள்ளியில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா

ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை நடுநிலைப் பள்ளியில் கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் புதிய கலையரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை நடுநிலைப் பள்ளியில் கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் புதிய கலையரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை ரால்ப் கிராண்ட் மதன் தலைமை வகித்தாா். கலப்பை மக்கள் இயக்க தலைவா்

பி.டி.செல்வகுமாா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

இதில், ஆரோக்கியபுரம் பங்குப்பேரவை துணைத் தலைவா் எஸ்.தங்கராஜ், துணைச் செயலா் பிரபா, பொருளாளா் புஷ்பலதா, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கே.லீன், ஜாா்ஜ் மற்றும் மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவா் டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து இப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவா் பரிசுகள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.