முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

3 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சாா்பில் 10 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன. நாகா்கோவில் நாகராஜா திடலில் இருந்து பிற்பகல் விநாயகா் சிலை ஊா்வலம் புறப்பட்டது. இதில் 151 விநாயகா் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊா்வலம் பீச் ரோடு வழியாக சென்று சங்குத்துறை கடற்கரையை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.